அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் என்ற உடல் வளர்ச்சி குறைந்த நபர் ஒருவர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று அசத்தி வருகிறார். இவர், கூடைபந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

இவரின் உயரம் 4 அடிகளே. இவருடன் விளையாடும் மற்றவர்களின் உயரம் 6 அடிக்கும் அதிகமாக இருந்த நிலையில், மனம் தளராமல் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றியுள்ளார். 

டர்னருடன் விளையாடுபவர்களும் அவரை ஊக்கப்படுத்தியதால் குறிப்பிட்ட போட்டியில் டர்னர் மட்டும் 3 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பெறச் செய்து, அசத்தியுள்ளார்.