நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிக்சர்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

‘மேயாத மான்’ மற்றும் சுப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வைபவ். இவர் தற்பொழுது அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் நடித்துவரும் புதிய படத்திற்கு ‘சிக்சர் ’என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி இயக்குனர் தெரிவிக்கையில்,‘ படத்திற்கு சிக்சர் என்று பெயரிடப்பட்டு இருந்தாலும், படத்தின் கதை கிரிக்கெட்டுடன் மட்டும் தொடர்பில்லாமல், ஒரு காதல் கொமடி எக்சன் கலந்த கொமர்சல் படமாக உருவாகி இருக்கிறது. 

இந்தப் படத்தில் நாயகன் வைபவ். இவருக்கு ஜோடியாக ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் அறிமுகமாகும் நாயகி பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இவர்களுடன் சதீஷ், ராமர், ராதாரவி ஆகியோர்களும் நடித்திருக்கிறார்கள். 

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறா.ர் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டீஸரும் வெளியாகும்.” என்றார்.

இதனிடையே நடிகர் வைபவ், காட்டேரி மற்றும் ஆர்கே நகர் ஆகிய படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும். இவை விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது