இங்கிலாந்து அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் டெய்லர்  கிரிக்கெட் அரங்கிலிருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளார்.

26 வயதுடைய ஜேம்ஸ் டெய்லர் 7 டெஸ்ட் போட்டிகளிலும் 27 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Arrhythmogenic Right Ventricular Arrhythmia ( ARVA )என்றழைக்கப்படும் தீவிர இருதய நோய் நிலை காரணமாகவே அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

தனது வாழ்வின் மிகவும் கடினமான வாரம் இதுவெனவும் உலகை திருப்பிப் போட்டுள்ளதாகவும் அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.