(எம்.மனோசித்ரா)

மக்கள் விடுதலை முன்னணியினருடானா சந்திப்பினையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்தசந்திப்பில் பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும், சுதந்திர கட்சி சார்பில் ரோஹன லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதன்போது தேர்தலில் வழுவான கூட்டணி அமைத்தல் மற்றும் சுதந்திர கட்சியுடன் சமரசத்தை ஏற்படுத்தி ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிடுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.