(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியில் ரூபாவின் வீழ்ச்சிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கணிப்பிட முடியும் ஆனால்  பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட  நஷ்டத்தை கணிப்பிட முடியாது என நிதி மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சி காரணமாக வரவு செலவு திட்டத்தை உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போனது. டிசம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கவேண்டியதை மார்ச் மாதம் சமர்ப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொருளாதார தாழ்வுமட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.