சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை பனாமா சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகா வெளியிட்டுள்ளது. குறித்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆவணங்கள் குறித்து மத்திய வங்கியினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து விபரங்களை உறுதி செய்து கொள்ள முடியாத காரணத்தினால் தற்போதைக்கு இதனுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்கள் நிறுவனங்கள் பற்றிய விபரங்களை வெளியிட முடியாது என அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.