ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவெம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 19 வயதான இளம் தாயொருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.03.2019) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று வயது நிறைவடைந்த குழந்தைக்குத் தாயான, மாவடிவேம்பு -02, மணிவாசகர் வீதியை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவானந்தம் ஜானு என்ற இளம் தாயின் சடலமே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் இளம் தாயொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இவர், வாராந்த சீட்டுப் பணம் செலுத்துவற்கும், தவணை அடிப்படையில் பணம் செலுத்துவதாகப் பெற்றுக் கொண்ட உடுதுணிகள், வீட்டுபயோகப் பொருட்கள் என்பனவற்றுக்கான பணத்தைச் செலுத்துவதற்கும் வசதிவாய்ப்பின்றி, விரக்தியில் இருந்து வந்ததாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM