யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், கட்டு துப்பாக்கி ஒன்றும், சோட் கண் ஒன்றும் மற்றும் 12 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 63 வயதுடைய சந்தேக நபர் ருவான்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது, அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபர் மேற்படி துப்பாக்கிகளை எதற்காக வைத்துள்ளார்? இவற்றை எங்கிருந்து எடுத்து வந்தார்? போன்ற கேள்விகளுக்கு விசாரணைகள் மூலம் விடை காணுமாறும் நீதவான் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.