(ரொபட் அன்டனி)

புதிய அரசியலமைப்பின் ஊடாக  தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை  வழங்குவதற்கு   ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான  தேசிய அரசாங்கம்  நேர்மையான முறையில்  வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. எனவே   எமது அர்ப்பணிப்பில்  தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைக்கலாம் என்று   ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

நாட்டில் தற்போது மத மற்றும் இன நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் நோக்கில் என்றுமில்லாதவாறு   செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில்  வடக்கு மற்றும் தெற்கு மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

புதிய அரசியலமைப்பின் ஊடாக  தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம்  முன்வைக்கப்படவுள்ளமை  தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.