(இராஜதுரை ஹஷான்)

நிறைவேற்று அதிகாரத்திற்கும், சட்டவாக்கத்துறைக்கும் இடையில் கடுமையான போட்டித் தன்மை மற்றும் மோதல் தன்மைகளே இன்று  காணப்படுகின்றது.  

இந்த இணக்கப்படாடற்ற தன்மையின்  காரணமாக நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்கின்றது. நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் தோற்கடிக்கபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஹோமாகமை நகரில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  வரவு - செலவு திட்டம்  நடுத்தர  மக்களுக்கு எவ்வித நலன்களையும் பெற்றுக் கொடுக்காது எனவும் குறிப்பிட்டார்.