(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் 'கிராமத்தை நோக்கி சிறிகொத்தா' வேலைத்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பமாகியது. 

கட்சியினை பலப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் காலங்களில் கம்பஹா, காலி மாவட்டங்களினூடாக நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் நோக்கி பயணிக்கவுள்ளது. 

இன்று காலை 10 மணியளவில் பாணந்துரை பிரதேசத்தில் ஆரம்பமாகிய கிராமத்தை நோக்கி சிறிகொத்தா வேலைத்திட்டம் மதுகம, பேருவளை பிரதேசங்களினூடாக களுத்துறைய வந்தடைந்தது. 

இதன்போது மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள், கட்சிக்கான புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள , மக்களின் பிரச்சினைகளை கேட்டறிதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.