149 பயணிகள் உட்பட 157 பேருடன் எத்தியோப்பியாவின் அடிஸ் அபா நகரிலிருந்து கென்யாவின் நைரோபி நோக்கி பயணித்த போயிங் 737 என்ற விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

எனினும் இந்த விபத்தில் இடம்பெற்ற உயிர் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிரவிலை்லை.