(ரொபட் அன்டனி) 

இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாட்டினால்  வடக்கு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன்   எமது மீன்வளமும் பாதிக்கப்படுகின்றது. ஆனால் இந்த விடயத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு   தனது தலையீட்டை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின்  பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். 

வடக்கு  மாகாண சபையும் இந்த விடயத்தில்   தனது  தலையீட்டை செய்யவில்லை.  கடந்த ஆறு மாத காலத்தில் தமிழக முதல்வர்  ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு தமது மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பில்  18 கடிதங்களை அனுப்பியுள்ளார்.  ஆனால்  வடக்கு முதல்வர் கடந்த ஆறு மாத காலத்தில்  எமது ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பவில்லை என்றும்  விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கத்தின்   செயற்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.   மக்களின் ஆணையை மீறும் வகையிலேயே  அரசாங்கம்  தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றது என்றும் அவர் கூறினார்.