(எம்.மனோசித்ரா)

டுபாயிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்திவரப்பட்ட வெளிநாட்டு  சிகரெட்டுக்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. 

டுபாயிலிருந்து இன்று அதிகாலை 2.30 பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, FZ - 557 என்ற விமானத்தினூடாகவே இவ்வாறு சட்ட விரோதமாக சிகரெட்டுக்கள் கடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விமானத்தில் பயணித்த பிரயாணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 160 பக்கட்டுக்களில் பொதியிடப்பட்ட 32 ஆயிரம் சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 19 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு சட்ட விரோத கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபரான 47 வயதுடைய கண்டி பிரதேசத்தை சேர்ந்த நபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளின் பின்னர் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.