தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்தியப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட அதில் பணித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

டி.சி-3 எனும் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் அதிகபட்சம் 30 பேர் பயணிக்க முடியும்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்த அந்த விமானம், வில்லாவிசென்சியோ எனும் நகரத்தின் தென்கிழக்கே 89 கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்கு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளிவரவாத நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.