மஹியங்கனை பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தன்னியக்க துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட தம்பகொல்ல , அழுத்கெடியாவ சந்தியில் நேற்று பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகசபரிடமிருந்து டி 56 ரக உள்நாட்டு துப்பாக்கியொன்றும், 24 தன்னியக்க துப்பாக்கி ரவைகளும் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன. 

மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.