மெக்சிகோவின் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் சலமன்கா பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று துப்பாக்கிகளுடன் ஒரு நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 7 பேர் படு காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியாசலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

தப்பிச் சென்றவர்களை தேடும் பணியில் பொஸார் ஈடுபட்டுள்ளனர்.