மீண்டும் ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தாயர் ஆகி வருகின்றது என்பதை காட்டு செயற்கைகோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

வியாட்நாமில் டொனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து வடகொரியா மீண்டும் அணுவாயுத சோதனைகளை நடத்த தயார் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகருக்கு அருகே அமைந்துள்ள சானும்டாங்க் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் அல்லது ஏவுகணையை ஏவுவதற்கான பணிகள் நடந்து வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தப் படங்களில் சானும்டாங்க் ஏவுதளத்தில் பெரிய அளவிலான வாகன நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கடந்த காலத்தில் இப்படி காணப்பட்டபோது அந்த நாடு, ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனை நடத்தி இருக்கிறது. எனவே இப்போது மறுபடியும் அந்த நாடு ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனையில் ஈடுபடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடகொரியாவின் பிரதான ராக்கெட் ஏவுதளமான சோஹேயும் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் தெரியவந்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.