ஏமன் உள்நாட்டுப் போரில் ஒரே ஆண்டில் 4,800  பொதுமக்கள் பலி: ஐ. நா தகவல்

Published By: Digital Desk 4

09 Mar, 2019 | 08:12 PM
image

ஏமனில் இடம்பெற்றுவரும் உள் நாட்டுப் போரில் கடந்த வருடம் மாத்திரம்  4,800 பொதுமக்கள்  கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ. நா. சபை தரப்பில், “ உலக அகதிகள் அமைப்பின் சார்பில் வியாழக்கிமை தரவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் இறந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் 100 பேர் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது காயமடைந்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. இந்த நிலையில்  பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் மீண்டும்  ஒப்பு கொண்டனர்.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது.

இப்போரில் இதுவரை 11,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52