சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படமான கபாலி மே மாத இறுதியில் அல்லது ஜுன் மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று இந்திய அரசு பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவிக்கிறது. இதற்காக சென்னையிலிருந்து நேற்று டெல்லிக்கு விமானம் மூலம் பயணமானார். அப்போது அவரிடம் கபாலி எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, மே மாத இறுதியிலோ அல்லது ஜுன் மாத தொடக்கத்திலோ வெளியாகும் என்று தெரிவித்தார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே நேரடியாக விநியோகம் செய்கிறார் என்றும், சென்னை நகர உரிமையை சத்யம் சினிமாஸ் வாங்கியிருப்பதாகவும், ஏனைய பகுதிகள்  முழுவதையும் தாணுவே வெளியிடுகிறார் என்றும், படம் அனேகமாக ஜுன் 17 ஆம் திகதியன்று வெளியாகும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல் : சென்னை அலுவலகம்