(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரை கடத்தி கப்பம்பெற்ற கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாகவது,

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரை கடத்தி கப்பம்பெற்றதாக கூறப்படும் குற்றதில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள  கடற்படை தளபதியின் குற்றச்சாட்டு உண்மையென்றால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

நாம் இராணுவத்தை பழிவாங்கவில்லை, யாரையும் தண்டிக்கவில்லை. எனினும் தனிப்பட்ட குற்றங்களை செய்த இராணுவத்தை தண்டிக்க வேண்டும். இப்போது 11பேர் கடத்தல்  மற்றும் கப்பம்பெற்று குற்றத்தில் கடற்படை தளபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்படி செய்துள்ளாரென்றால் அவரையும் தண்டிக்க வேண்டும். அவர் பாதுகாப்பு அதிகாரி என்பதற்காக அவரை பாதுகாக்க முடியாது. குற்றத்துக்கான தண்டனையை கொடுத்தேயாக வேண்டும் என்றார்.