ஐக்கியதேசிய கட்சியில் இணைவீர்களா என கேட்பவர்களிற்கு சந்திரிகாவின் பதில் என்ன?

Published By: Rajeeban

09 Mar, 2019 | 11:44 AM
image

ஐக்கியதேசிய கட்சியில் இணையப்போகின்றீர்களா என்னிடம் கேள்வி எழுப்புவர்களின் காதுகள் உடையும் விதத்தில் அறை விழும்   என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நான் ஐக்கியதேசிய கட்சியிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேரப்போவதில்லை என பல தடவை தெரிவித்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கட்சிக்குள் நான் புறக்கணிக்கப்படுவதை காரணம் காண்பித்து என்னை ஐக்கியதேசிய கட்சிக்குள் சேர்ப்பதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே நான் எனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தேன்,நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறும்போது எனது பயணத்தை அந்த கட்சியிலேயே முடித்துக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உரிய முறையில் நிர்வகித்தால், கட்சியின் கிராமிய மட்ட அமைப்புகளை பலப்படுத்தினால் அந்த கட்சியால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பின்பற்றுகின்றனர் என்பதற்காக ஏன் நாங்கள் இன்னொரு கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி நாங்கள் மீண்டும் மக்களை கொலை செய்யவேண்டுமா?பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து மீண்டும் ஊழலில் ஈடுபடவேண்டுமா எனவும் சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த நான்கு மாதங்களாக  என்னை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன ஆனால் எனது மரணம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் நீடிப்பது கஸ்டமானதாக காணப்பட்ட காலத்தில் நாங்கள் மற்றொரு கட்சியை உருவாக்கினோம் ஆனால் ஐக்கியதேசிய கட்சியிலோ அல்லது வேறு கட்சியிலோ இணையவில்லை,நிலைமை சரியான பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தி 17 வருடங்களின் பின்னர் 1994 இல்  ஆட்சியில் அமர்த்தினோம் எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38