மன்னார் மனிதப் புதைகுழியின் முழு அறிக்கையின் பின் இறுதித் தீர்மானம் : சட்டத்தரணிகள்

Published By: Daya

09 Mar, 2019 | 10:19 AM
image

  மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை அது குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது என காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளது.கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் ரி. சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் தொடக்கம் 600 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்தவர்களுடையவை என கார்பன் கால நிர்ணய அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

நவீன தொழில் நுட்பத்திற்கான உள்ளீடுகள், விஞ்ஞான ரீதியான கண்டு பிடிப்புகளும், மானுட தடயவியலுடன் தொடர்புடைய விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.புதைகுழியில் கண்டு பிடிக்கப்பட்ட வேறு சான்றுகள் மற்றும் தடயப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும்.

ஏனைய ஆய்வுகளின் அறிக்கை மற்றும் மனிதப் புதைகுழியில் பணியாற்றும் நிபுணர்களின் கருத்துகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50