மாவனெல்லை பிரதேசத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் இன்று அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.