வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,  ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை பருகுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

மேலும், பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் இயன்றளவு நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.