சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இன்று பெண்களுக்கான தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்ட ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் நாட்களில் ரயில் சேவைகளை போன்று பெண்களுக்கான பஸ் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இதன்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.