(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கண்டி மாநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறைமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும்,  இரவு நேர சந்தைத் திட்டத்தால் ( நைட்பசார்) புனித பூமியாகக் கருதப்படுகின்ற தலதாமாளிகைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - அபகீர்த்தி தொடர்பிலும் பாராளுமன்றத்தின் வேலுகுமார் எம்.பி. கவனத்துக்கு கொண்டுவந்தார். இதையடுத்து பொருத்தமற்ற இவ்விரண்டு திட்டங்களையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியல்ல, புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் உறுதியளித்தனர்.