மன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 140 தடவைகளுக்கு மேலாக குறித்த மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், அதிலிருந்து சுமார் 323 க்கும் மேற்பட்ட முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றையதினம் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என, மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த மன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.