" எழுத்து மூலம் கோரிக்கையை முன்வையுங்கள் "

By Vishnu

08 Mar, 2019 | 12:49 PM
image

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய  கோரிக்கைகள் காணப்பட்டால் அவற்றை எழுத்து மூலமாக சமர்ப்பிக்க முடியும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானது.  மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்க முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right