பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் வர்த்தகருமான “கதிரான உக்குவா” அல்லது “வெலே சுரங்க” என அழைக்கப்படும் லகிரு நயானஜித் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டக்குளியிலுள்ள கதிரானவத்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து போதைப்பொருள், நிறுப்பதற்காக பயன்படுத்தும் தராசு மற்றும் வாள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.