லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

லிந்துலை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி சென்று வார்ட்டில் அனுமதிக்கப் பட்டிருந்த ஆண் நோயாளி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். 

இதனையடுத்து வைத்தியசாலை தரப்பினர் லிந்துலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து நோயாளியை தாக்கிய நபர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.