கடலில் மீன் பிடிக்கும் பெண்கள்

Published By: Daya

08 Mar, 2019 | 10:25 AM
image

இந்தியாவில் மீனவப் பெண்கள் கடலில் சென்று மீன் பிடித்து வந்து கடல் தொழிலை செய்து வருகின்றனர். 

மீன்பிடித் தொழில் என்பது பெரிதும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில். அதிலும் கடலில் மீன் பிடிப்பவர்களாக பெண்களைப் பார்ப்பது அரிது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அருகே உள்ள சடமுடையான்வலசை, பிச்சைமூப்பன்வலசை, ஆதஞ்சேரி, தோணித்துறை ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள மீனவப் பெண்கள் கடலில் தனியாக சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

தலைமுறை தலைமுறையாக அப்பகுதி மீனவப் பெண்கள் கடலில் தொழில் செய்து வருகின்றனர். பெண்கள் அதிகாலை ஐந்து மணியளவில் கடற்கரையில் இருந்து வல்லம் என அழைக்கப்படும், இஞ்சின் பொருத்தப்படாத படகு மூலம் கரையில் இருந்து மூன்றரை கிலோமீற்றர் தூரம் சென்று கடலில் பாசி , மீன் , நண்டு, கனவாய் , இறால்  போன்றவற்றை பிடித்து பல்வேறு கடல் தொழில்களை செய்து வருகின்றனர். பெண்கள் தனித் தனியாகவும், மூன்று நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு குழுவாகவும் மீன் பிடித்து வருகின்றனர். இப்படி குழுவாக பிடித்து வரும் மீன்களை சம பங்குகளாகப் பிரித்து கொள்வார்கள்.

தூண்டில் இட்டு மீன்பிடித்தல், கரைவலை முறையில் மீன் பிடித்தல், கூண்டு வைத்து மீன் பிடித்தல்,நண்டு மற்றும் இறால் வலைகள் ஆகியனவற்றை பயன்படுத்தி தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி இவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று இறால், கணவாய் போன்ற ஏற்றுமதி ரக மீன்களைப் பிடித்து வருகின்றனர். அவை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், பெண்கள் பிடித்து வரும் மீன்கள் உள்ளூர் மீன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

காலையில் ஆறு மணிக்கு குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு,மீன் பிடிக்க கடலுக்குள் செல்வோம். பின் பகல் இரண்டு, மூன்று மணிக்கு மேல் திரும்பி வருவோம், நண்டு வலை, மீன் வலை, கூண்டு ஆகிய அனைத்து வகை வலைகளையும் பயன்படுத்தி மீன் பிடிக்கிறோம்" என குறித்த பெண்கள் தெரிவித்துள்ளனர். 

நள்ளிரவு ஒரு மணிக்கு பெண்கள் அனைவரும் சேர்ந்து மீன் பிடிக்க கடலுக்குள் செல்வோம். பின் ஏழு மணிக்கு மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்புவோம் ஆனால் கடல் பாசி எடுக்க சென்றால் காலையில் ஏழு மணிக்கு சென்று பகல் இரண்டு மணியளவில் கரை திரும்புவோம். இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக செய்கிறோம். இதுதான் எங்களது வாழ்வாதாரம். சில நேரங்களில் கடலில் திடீரென அலைகள் வேகமாக அடித்தால் படகு கவிழ்ந்து விடும் ஆனாலும் நாங்கள் தன்னம்பிக்கையை விடாமல் எதிர் நீச்சலிட்டு உயிர் தப்புவோம். கடலில் நீந்தி அருகில் உள்ள தீவுகளில் தஞ்சம் அடைவதும் உண்டு" என மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52