(ஆர்.விதுஷா)

நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிவுறுத்தியதன்படி தயாரிக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படும் என இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார்.

இதனூடாக நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான உபாயங்கள் குறித்து தெளிவுபெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.