(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா, கோதுமை மா, மற்றும் பழங்கள் ஆகியவற்றினால்  சுகாதார நலன் பிரச்சினைகளே  ஏற்படுகின்றது. ஆகவே அரசாங்கம் உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என  அரச வைத்திய  சங்கத்தினர்  எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தனர்.

அரச வைத்திய சங்கத்தினரது கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாக எதிர்கட்சி தலைவர் வாக்குறுதியளித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரச வைத்திய சங்கத்தினருக்கும் எதிர்க் கட்சி தலைவருக்குமிடையிலான சந்திப்பு பாராளுமன்ற  எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.