ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘காதலிக்க யாருமில்லை’ இன்று பெயரிடப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் நாகேஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘காதலிக்க நேரமில்லை’. பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது ‘காதலிக்க யாருமில்லை’ என்ற பெயரில் படம் ஒன்று தயாராகிறது.

இதுகுறித்து அப்படத்தின் இயக்குனரான கமல் பிரகாஷ் அவர்களிடம் கேட்டபோது,“ 

நாகேஷ் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ தமிழ் சினிமாவில் வெளியான முதல் ஈஸ்ட்மென் கலர் படம். அது ஒரு கல்ட் கொமடி படம். அதே போல் இந்த படத்திலும் நாயகன் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த ஒரு முரட்டு ஆசாமி. யாருக்கும் அவர் மீது காதல் வராது. அதனால் தான் படத்தின் டைட்டிலை ‘காதலிக்க யாருமில்லை’ என்று பொருத்தமாக வைத்திருக்கிறேன்.’ என்றார். 

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘பிக் பொஸ்’ புகழ் நடிகை ரைய்ஸா வில்சன் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.