(எம்.மனோசித்ரா)

நாட்டில் அதிக நிலப்பரப்பில் விவசாய மக்கள் காணப்படுகின்ற போதிலும், அவர்களுக்காக இம்முறை வரவு - செலவு திட்டத்தில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கான கடன் திட்டங்கள் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்து, அவர்களை மேலும் கடனாளிகளாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.