இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த தனது மனைவிக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காக தந்தையொருவர் மேற்கொண்ட செயல் அவரது மகனுக்கு விபரீத விளைவை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பிரபலமான வர்த்தக நிலையத்தில் சிறிய குழந்தைக்கு அசிட் வீசும் காட்சியொன்றின் சி.சிரி.வி. காணொளி ஒன்று அந்நாட்டுப் பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த காணொளி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் குறித்து அனைத்து ஊடகங்களும் தம் கவனத்தையும் ஈர்த்துள்ளன. 

இந்நிலையில் அசிட் வீச்சை மேற்கொண்ட தந்தையார், தனது மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை தடுப்பதற்காக தான் அசிட் வீசியதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, தனது குழந்தை மனைவியோடு இருப்பது பாதுகாப்பில்லை என  சிறுவனின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.