கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய புத்தளம் பொலிஸார் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1.7 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் பெரியத்தீவு பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனமொன்றை சோதனைக்குட்ப்படுத்திய போதே மேற்படி  கேரளா கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தை நிறுத்தி விட்டு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.