இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று பனாமாவுக்கு பனாமா பணச்சலவையில் ஈடுபட்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளுக்காக செல்லவுள்ளதாக  அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பொல்கஹாவெல பகுதியில் இடம்பெற்ற வைபமொன்றில் வைத்து அவர் இதனைக் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,பனாமாவில் உள்ள பொன்சிகா நிறுவனத்துடன் இணைந்து பணச்சலவையில் ஈடுபட்ட இலங்கையர்கள் குறித்த ஆவணங்கள் வெளியாகி இருக்கின்றன.அவர்கள் குறித்த விபரங்கள் அடுத்தவாரம் அளவில் முழுமையாக வெளியாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.