இந்தியா, கன்னியாகுமரி மாவட்டத்தில், திவ்யா சில்வெஸ்டர் என்ற பேராசிரியைக்கும் பெல்லார்மின் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதன்கிழமை வாயில் இரத்தம் வழிந்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த திவ்யா மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இம்மரணத்தின் முக்கிய திருப்பமாக, இறப்பதற்கு முன்பாக, அவரது  கணவர் தான்  சாப்பிட்ட உணவில் கொடிய  விஷம் கலந்துவிட்டதாக திவ்யா மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

கணவரிடம் விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் திருமணத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால், தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், இதனால் தன்னிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். இல்லையேல் கொலை செய்துவிடுவேன் என கணவர் மிரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால், பலலட்சம் செலவு செய்து பெற்றோர் நடத்தி வைத்த திருமணம், இதனால் பிரிந்து செல்ல மனமின்றி திவ்யா இருந்துள்ளார்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது,  திவ்யாவின் வாயில் பாதரசத்தை ஊற்றி கொல்ல முயன்ற சந்தர்ப்பத்தில், பாதரசத்தை கைகளால் தட்டியபோது அவை நகைகளில் படிந்து அனைத்தும் சேதமடைந்தன. இதுகுறித்து தனது பெற்றோரிடம் திவ்யா தெரிவித்தபோது, அவரை சமாதானப்படுத்தி கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். தான் சாப்பிடுவதற்கு முன் தனது நாய்க்கு கொஞ்சம் உப்புமாவை வைத்துள்ளார், அதனை சாப்பிட்ட நாய் இறந்துவிட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா உதவி கேட்டு அலறியுள்ளார்.

ஆனால், கணவன் மாமனார் மற்றும் மாமியார் கண்டுகொள்ளாத நிலையில் அம்பியுலன்ஸிற்கு அழைப்பையெடுத்து விட்டு,  மயங்கிவிழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய திவ்யா, தனக்கு விஷம் வைத்து கணவர் உணவுகொடுத்துவிட்டார் என மரணவாக்கு மூலம் அளித்து சிறிது நேரத்தில் இறந்துள்ளார்.

இதன்போது, திவ்யாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பெல்லார்மின் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இறந்துபோன நாயின் உடலும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம், அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கதது.