பெண் ஒருவரின் சடலத்தை மரவிலயிலிருந்து ஹட்டன் வரைக்கும் முச்சக்கர வண்டியில் எடுத்து சென்ற இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

66 வயதான பெண் ஒருவர் சுகவீனமடைந்துள்ளார் எனக் கூறி மாரவிலயிலிருந்து ஹட்டன் வரைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்து, மாரவில பகுதியை சேர்ந்த இருவர்  முச்சக்கரவண்டி ஒன்றை 20 ஆயிரம் ரூபா செலுத்தி வாடகைக்கு பெற்று குறித்த பெண்ணின் சடலத்தை முச்சக்கரவண்டியில் ஏற்றிகொண்டு  டிக்கோயா - ஒட்றி தோட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். 

இந்நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதி டிக்கோயா பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு சென்ற போது குறித்த வீட்டில் தங்கியிருந்தோர் மரண வீட்டுக்கு  தயார்படுத்திக்கொண்டிருந்தனர் . குறித்த சம்பவத்தை அறிந்த முச்சக்கரவண்டியின் சாரதி தான் ஏற்றிவந்தது சடலம் என்பதை அறிந்து கொண்டுள்ளார். 

இந்நிலையில், குறித்த சடலத்தை வீட்டின் உரிமையாளர் பொறுப்பேற்ற பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி ஹட்டன் பொலிஸாருக்கு புகார் தெரிவித்தாக ஹட்டன் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி தான் ஏற்றிவந்தது சடலம் என்பதை அறிதிருக்கவில்லை எனவும் பெண் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்தே இருவர் முச்சக்கரவண்டியில் குறித்த சடலத்தை ஏற்றியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.  

குறித்த பெண்ணின் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.