இலங்கையில் பெண்களுக்கு மாத்திரம் தனி ரயிலில் பெட்டியை ஒதுக்கும் நடவடிக்கை மகளிர் தினமான நாளை அமுல் படுத்தவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை வேயாங்கொட ரயில் நிலையத்தில் இருந்து 6.59 மணியளவில் தனது பயனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்மை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பாலியல் வன் கொடுமை மற்றும் பல துன்புறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் இடையில் குறித்த இவ்விடயமானது நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.