சட்டவிரோதமான முறையில் இலங்கையை விட்டு வெளியேற முற்பட்ட 30 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலையில் ரோந்து நடவடிக்கையின் ஈடுபட்ட 02 துரித தாக்குதல் படகுகள் மூலம் தெற்கு கடலில் 80 கடல் மைல்கள் தூரத்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குறித்த படகினை சோதனைக்குட்படுத்தியபோதே இவர்கள் கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.