சட்டவிரோத யானைக் கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

குறித்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே சட்டவிரோத யானைக் கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.