பதுளை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பதுளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.