வீட்டில் வளர்த்த சிங்கத்தால் நேர்ந்த விபரீதம் 

Published By: Daya

07 Mar, 2019 | 10:24 AM
image

  வீட்டில் வளர்த்து வந்த சிங்கத்திற்கு உணவு வைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கல் பிராசெக்கை சிங்கம் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பிய - செக் குடியரசில், ஸ்லின் பிராந்தியத்தில் உள்ள ஸ்டிசோவ் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான மைக்கேல் பிராசெக் தன்னுடைய வீட்டில் கூண்டுகள் அமைத்து 9 வயதான ஆண் சிங்கம் மற்றும் 2 வயதான பெண் சிங்கத்தை வளர்த்து வந்துள்ளார். 

இனப்பெருக்கம் செய்யும் நோக்கில், சிங்கங்களை வளர்த்து வந்த அவர் அதற்கான முறையான உரிமங்கள் எதையும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிராம நிர்வாகம் அவருக்கு ஏற்கெனவே அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மைக்கல் பிராசெக், தன்னுடைய பெண் சிங்கத்துடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, அந்த வழியாக சைக்கிளில் சென்ற நபரை சிங்கம் தாக்கியமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் செக் குடியரசின் சட்டப்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவை வேறு இடத்துக்கும் மாற்றப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல உணவுவைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கல் பிராசெக்கை, ஆண் சிங்கம் கடித்து குதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் மைக்கல் பிராசெக்கின் உடலை மீட்பதற்காக 2 சிங்கங்களையும் சுட்டுக்கொன்றதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷ் தனது சொந்த நலனுக்காக சிறுபான்மையினரை...

2024-12-13 14:40:45
news-image

அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி...

2024-12-13 14:08:30
news-image

மெட்டா, கூகுள் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும்...

2024-12-13 14:07:22
news-image

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் சீன ஜனாதிபதி?

2024-12-13 13:57:52
news-image

சிரியாவின் கிளர்ச்சியாளர்களிற்கு உக்ரைன் ஆளில்லா விமானங்களை...

2024-12-13 08:11:56
news-image

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று...

2024-12-12 11:15:05
news-image

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5...

2024-12-12 10:24:16
news-image

மேற்குகரையில் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்...

2024-12-12 08:00:31
news-image

சிட்னியில் யூதர்கள் அதிகமாக வாழும் பகுதியில்...

2024-12-12 07:41:45
news-image

ஜேர்மனியில் வன்முறையில் ஈடுபட திட்டம் -...

2024-12-12 07:33:34
news-image

ஆப்கானில் தற்கொலைகுண்டு தாக்குதல்- அகதிகள் விவகார...

2024-12-11 19:59:07
news-image

தென்கொரிய ஜனாதிபதியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல்

2024-12-11 14:52:28