Published by R. Kalaichelvan on 2019-03-07 10:26:24
சட்டவிரோதமான முறையில் மதுபானம் தாயரிப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ் மா அதிபரால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 011-3 024820, 011-3 024848, 011-3024850 என்ற இலக்கங்களூடாக பொதுமக்கள் சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.