(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்யவும், மேலும் பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூரு பரப்பவும் சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக இன்ற நீதிமன்றுக்கு அறிவிக்கப்ப்ட்டது. 

பிரதிப் பொலிஸ்மா அதிபர்  நாலக சில்வாவுக்கு எதிராக போதுமன அளவு தெளிவான சாட்சிகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய, இன்று நீதி மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரால், அதன்படியே அவரை விளக்கமறியலில் வைத்து விசாரணைகள் இடம்பெறுவதாக கூறினார்.

அத்துடன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிரபல பாதாள உலக தலைவரான மாகந்துர மதூஷ் மற்றும் பிரபல பாடகர் அமல் பெரேராவுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளமைக்கானஆதாரங்கள் இருப்பதாகவும் அத் தொடர்பை அவர் மிக சூட்சுமமாக  முன்னெடுத்துள்ளதாகவும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தீலிப பீரிஸ் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவுக்கு சுட்டிக்காட்டினார்.