(எம்.ஆர்.எம்.வஸீம்)

மேல் மாகாணத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களிற்கான  விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை வரத்தமானியில் பிரசுரிக்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

இப் புதிய நியமனமானது மேல் மாகாண கம்பகா, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு  நன்மையளிக்கும். 

அத்துடன் மேல்மகாணத்தில் சுமார் 200 பட்டதாரி ஆசிரியர் வெற்றிடம் நிலவுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்வதே எமது திட்டமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.