(எம்.எப்.எம்.பஸீர்)

தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில், அம்மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

பிரதம நீதியர்சர் நலின் பெரேரா தலைமையிலான முர்து பெர்ணான்டோ அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இந் நிலையில் நாளை இடம்பெறவுள்ள இந்த மனு மீதான பரிசீலனையின் போது, அம்மனு  தொடர்பில் இடையீடு செய்ய அனுமதி கோரி இடையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.